Saturday, April 20, 2013

பொன்ராஜ் - தங்கராஜ்

ஒருவர் ரயில் ரோடில், ஒருவர் பஸ் ரோடில்,,,
ஒருவர்  பெயர் பொன்ராஜ் ஒருவர் பெயர் தங்கராஜ்
கருத்து ஒற்றுமை இருக்கிறது
பெயரில் கூட பொருள் ஒற்றுமை இருக்கிறது
அப்படியே சென்று விடாமல், நூர்சாகிபுரம் கிராமம் சிறக்க
முடிந்ததை செய்யுங்கள்.....
வருங்காலம் வாழ்த்தும்.......

நூர்சாகிபுரம் என்ற ஒரு சிறிய ஊரில் பிறந்த பெரிய இயக்குனர் அண்ணன் க.பொன்ராஜ்


நம் மண்ணில் மூன்றாம் உலக யுத்தம் நடைபெறும் என்றால் அதன் மூல காரணம் ஒரு நாட்டின் எண்ணெய் வளமாக இருக்காது அதன் நீர் வள ஆதாரத்தைப் பொருத்தே அமையும். எல்லாவற்றையும் தாண்டிய சுரண்டல் அந்நிய நாட்டில் இருந்து பெரு வணிக முதலீட்டில் வரும் பன்னாட்டுக் குளிர் பான கம்பெனிகள்.வெறும் குளிர்பானங்களை மட்டும் த‌யாரித்துக் கொண்டு இருந்தவர்கள் இப்போது சுத்தமான குடிநீர் என்ற பெயரில் கிளைகளை தொடங்கி வெகு நாட்கள் ஆகிறது. அக்வாஃபினாவை மட்டுமே சுத்தமான குடிநீர் என்று குடிக்கும் தலை முறையையும் உருவாக்கி விட்டார்கள்.சந்தை மயமாகப்பட்ட உலகில் நாளை கிராமங்களிலும் சென்னையைப் போன்ற கேன் (can) தண்ணீர் முறையே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.இதன் சோகங்களை வலிகளை உண்ர்த்துவதாக க‌லை நேர்த்தியுடன் எடுக்கப்பட்ட குறும்படம்" ஒரு ஊர்ல" இதன் இயக்குனர் க.பொன்ராஜ். அவருடனான நேர்காணல் இதோ:
இனி இயக்குனர் திரு. க.பொன்ராஜ் அவர்களுடன் ஒரு நேர்காணல்: 
1. இந்த குறும்படத்தில் இடதுசாரிச் சிந்தனையை அழகாக கொணர்ந்துள்ளீர்கள். அடிப்படையிலயே உங்கள் குடும்பம் இடதுசாரித் தன்மையை கொண்டதா?. உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்.

இங்கே இடதுசாரி சிந்தனை என்ற வார்த்தைப் பிரயோகமே தவறென நினைக்கிறேன். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதை இடதுசாரி சிந்தனை என்று சொல்வது நாத்திகர்கள் எல்லாம் திராவிட கழகத்துக்கார்கள் என்று சொல்வதைப் போலத்தான்.இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் கம்யூனிசம் குறித்த மேலோட்டமான கேள்வி ஞானத்தை மட்டும் வைத்துக் கொண்டு நானும் ஒரு இடதுசாரி சிந்தனையாளன் என தம்பட்டம் அடித்துக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. அப்பா ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்டாக இருந்தவர். இன்றும் பழைய தோழ்ர்களைக் கண்டால் அந்தக் கால போராட்ட வாழ்க்கையைப் பற்றி சிலாகித்து பேசிக் கொண்டிருப்பார். ஆனால் எங்களிடம் அவர் எதையும் பேசியதுமில்லை,திணிக்கவுமில்லை.

2. குறும்படங்கள் மீதான ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு வந்தது?.குறும்படம் உங்களுக்கு பரிச்சியமான நாட்கள் பற்றிச் சொல்லுங்கள்.
மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் பத்திரி்கையில் படிக்கும் போதுதான் குறும்படம் எடுக்கத் தொடங்கினோம். அப்போது நான் ஆனந்த விகடனில் மாணவ நிருபராகவும் இருந்தேன். குறும்படம் இயக்க வேண்டும் என்ற கனவெல்லாம் அப்போது கிடையாது. ஆனால் பல்கலைக்கழக நோட்டீஸ் போர்டில் தற்செயலாக ஒரு குறும்பட போட்டிக்கான அறிவிப்பை பார்த்த் நண்பர்கள் குறும்படம் எடுக்கலாம் என திட்டமிட்டார்கள். அப்படி எடுத்ததான் "தண்ணிக் காசு" என்ற படம். " ஷாட்" என்றால் என்ன? என்ற அடிப்படை அறியு கூட இல்லாமல் நாங்கள் எடுத்த "தண்ணிக் காசு" மதுரை, தான் பவுண்டேசன் நடத்திய குறும்பட போட்டியில் சிறப்பு பரிசை வென்றது. ஒருவேளை பரிசு கிடைத்திருக்காவிட்டால் மீண்டும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் பரிசாக 2,500 ரூபாய் கிடைத்ததால் அடுத்ததாக் "இனிப்பான் இந்தியா" எனற படத்தை எடுத்தோம். அது லக்னோவில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில் நடுவர்களுக்கு பிடித்த படமாக தேர்வாகியது. ஒவ்வொரு கட்டத்திலும் நண்பர்கள் கொடுத்து வரும் ஊக்கம் தான் இன்றைய "ஒரு ஊருல..."படம் வரை என் குறும்படக் கனவை நீர்த்துப் போகாமல் வைத்திருக்கிறது.

3. குறும்படங்களை மட்டுமே நம்பியான வாழ்க்கைச் சூழல் நம் சமூகத்தில் இல்லை.என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்?.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்திப் பிரிவில் உதவி ஆசிரியராக இருக்கிறேன்.
4. இக் குறும்படத்தில் தாத்தா பேரனுக்கும் இடையான கதை கேட்கும் நிகழ்வு ,தாத்தா கதை கூறும் போது அவ்வாறே பார்வையாளனையும் கதை கேட்கும் மனநிலைக்கு இட்டுச் செல்கிறது. இக்கதைக் காண‌ கரு எவ்வாறு உதித்தது?

குளிர்பான ஏகாதிபத்தியத்தை வைத்து குறும்படம் இயக்க வேண்டும் என நெடுநாட்களாக நினைத்து வந்தாலும் கதையில் பிரச்சார நெடி அடிக்கக் கூடாது என்பதால் கதைக்காக அவசரப்படவில்லை. பின்புதான் தூண்டிலை மையமாக வைத்து கதையை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.அதற்குக் காரணம் என் தாத்தா.அவரோடு சிறுவயதில் மீன் பிடிக்கப் போன அனுபவம் கதையை மெருகூட்ட இன்னும் உதவியது என்று சொல்லலாம்.ஒரு கதைசொல்லியின் பார்வையில் காட்சிகள் விரிவதாக யோசித்ததற்கு உண்மையான காரணம் பட்ஜெட்தான்.இதுவரை எந்தப் படத்திற்கும் டப்பிங் வைத்துக் கொண்டதில்லை.எல்லாமே நேரடியாக பதிவு செய்யப்பட்ட குரல்தான்.இந்தப் படத்திலும் "கதை சொல்லி" யோசனை தோன்றியது.இறுதியில் அதுவே படத்திற்கு உயிரோட்டமாக அமைந்தது தனிக்கதை.

5. அழகான வட்டார வழக்கை பதிவு செய்துள்ளீர்கள். உங்கள் ஊர் எது?. அதைப் பற்றிய நினைவுகளை பதிவு செய்யுங்களேன்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நூர்சாகிபுரம் என்ற கிராமம் எனது ஊர்.செத்துப் போன சீதாப்பாட்டி குளிக்கும்போது கால் பிடித்து இழுத்து பயங்காட்டும் சீதா கிடங்கு, அழகம்மா செத்த அழகம்மா கிடங்கு என கதைகளை தாங்கி நிற்கும் குளங்களும் கண்மாய்களும் எங்கள் ஊரிலும் உண்டு.டவுசர் பிராயத்தில் மண்புழு தோண்டி,மூங்கில் தூண்டில் ஏந்தி தாத்தாவை இழுத்துக் கொண்டு குளம் குளமாய் அலைவேன். சோற்றுகலையும் வாழ்க்கையில் இன்று சென்னைக்கு அகதியாய் வந்து விட்டாலும் ஊருக்கு போகும் போது கூட தூண்டிலை நினைக்க முடியாது.காரணம் எங்கள் ஊரில் குளம் நிரம்பி 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.படத்தில் வரும் காய்ந்த கண்மாய்கள் எங்கள் ஊரைச் சுற்றியுள்ளவைதான்.கிராமத்திலேயே பிறந்து வளர்ந்ததால் கரிசல் மண்ணின் வட்டார வழக்கு இயல்பிலேயே எனக்கு பரிச்சயமானது.ஆனால் படத்தில் வரும் வட்டார வழக்கைப் பொருத்தவரை எனக்கு முழு திருப்தி இல்லை.

6. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்?.நீங்கள் வாசித்த சிறந்த படைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டென்றாலும் பரந்த வாசிப்பனுபவம் கிடையாது.மறைந்த எழுத்தாளர் கந்தர்வனின் படைப்புகள் ரொம்ப பிடிக்கும்.

7. குறும்படங்களில் தொடர்ந்து இயங்குவீர்களா?.குறும்படங்கள் சினிமாவுக்கான பயிற்சிப் பள்ளியாகவே பார்க்கப்படுகிறது. இதனைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?
ஒளிப்பதிவாளர் செல்லையா முத்துசாமி,படத்தொகுப்பாள்ர் பாலாஜி சண்முகம் என் நாங்கள் ஒரு அருமையான அணியாக இருக்கிறோம். எங்களின் கூட்டு முயற்சியில் தொடர்ந்து இது போன்ற படங்களை எதிர்பார்க்கலாம். ஆனால் இடைவேளி சற்று அதிகமாகலாம்.இன்று பலரும் குறும்படங்கள் இயக்குவதே சினிமாவை இலக்காகக் கொண்டு தான். சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பாக தங்களது திறமையை நிரூபிக்க குறும்படங்கள் பயிற்சிக் களமாக கிடைத்திருப்பது வரப்பிரசாதம்தான்.அதே நேரம் குறும்படங்களின் கிடைக்கும் சுத‌ந்திரம் சினிமாவில் கிடைக்காது என்பதையும் எல்லாரும் உண‌ர்ந்தே இருக்கிறார்கள்.

8. நீங்கள் இயக்கிய "ஒரு ஊருல" படத்திற்காக ஏதேனும் விருதுகள் வாங்கி இருக்கிறீர்களா?

சென்னையில் கவிதை உறவு நடத்திய குறும்படபோட்டியில் சிற‌ப்பு பரிசு கிடைத்தது.மற்றபடி இப்போது தான் போட்டிகளுக்கும் படத்தை அனுப்பத் தொடங்கியிருக்கிறோம்.

9. வணிக சினிமாவைப் போல் குறுப்படங்களிலும் மசாலாத்தன்மை அதிகரிக்கும் அபாயம் இருகிறது. இதை சரியாக கலைந்தெரிய எதை வழியாகச் சொல்வீர்கள்?.

குறும்படத்தின் அடுத்த கட்டம் சினிமா என்பதால் குறுப்படத்தையே சினிமாத்தனமாக எடுக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது.இது ஆரோக்கியமானதல்ல.வணிக நோக்கம் முதன்மையானதல்ல என்பதால் பல சோதனை முயற்சிகளுக்கு களமாக இருக்கிறது குறும்பட உலகம். அந்த சுதந்திரத்தை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இயக்குனர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.இயக்குனர்கள் நினைத்தால் ஒழிய குறும்படத்தில் சினிமாத்தனம் அதிகரிப்பதை தவிர்க முடியாது. குறும்படம் சினிமாவிற்கான ஒரு வழியே தவிர சினிமாவின் முன்னோட்டம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நல்ல குறும்படங்களுக்கு குறும்பட போட்டிகள் கொடுக்கும் அங்கிகாரமும் ஆர்வலர்கள் கொடுக்கும் வரவேற்பும் கூட மாறுதலைக் கொண்டு வரமுடியும்.

10. நீங்க‌ள் குறும்ப‌ட‌ங்க‌ளின் வ‌ள‌ர்ச்சியை எவ்வாறு பார்க்கிறீர்க‌ள்.?குறும்ப‌ட‌ங்க‌ளின் எதிர்கால‌ம் எப்ப‌டி இருக்கும் என‌ க‌ணிக்குறீர்க‌ள்?.

வணிக ரீதியிலான சமரசங்களுக்கு இடமளிக்கிற ஊடகங்களுக்கு மத்தியில் ஒரு மாற்று ஊடகமாகத்தான் குறும்படத்துறை இயங்கி வருகிறது.அதன் வணிக ரீதியிலான சமரசங்களுக்கு பலியாகிவிடக்கூடாது. குறும்பட குறுந்தகடுக‌ளுக்கான வணிகச் சந்தை சாத்தியமாவதுதான் அதை தயாரிக்கும் பலருக்கும் ஊக்கமளிக்கும்.அது சாத்தியமாகுமென்று நம்பலாம்

2011 நூர்சாகிபுரம் இந்து தொடக்க பள்ளி ஆண்டு விழா


2012 நூர்சாகிபுரம் இந்து தொடக்க பள்ளி ஆண்டு விழா


2009 ஆண்டுவிழா


2009 ஆண்டுவிழா நூர்சாகிபுரம் இந்து தொடக்க பள்ளி



2010 நூர்சாகிபுரம் இந்து தொடக்க பள்ளி ஆண்டு விழா


Maruthuva Mugam


ரயில்வே கேட் இல்லை விபத்து அபாயம் - Yahoo!


மரக்கன்று நடும் விழா


லட்சுமியாபுரத்தில் ஜல்லி கொட்டியும் ரோடு வேலை துவங்காததால் பாதிப்பு Dinamalar-1


நூர்சாகிபுரத்தில் வாறுகால் தோண்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி Dinamalar


கிராமத்தை தத்தெடுக்கும் விழா


Hindu Primary School Annual day

நூர்சாகிபுரம்நாடார் உறவின்முறைக்கு பாத்தியப் பட்ட இந்து தொடக்க பள்ளி இல் 94 வதுஆண்டு விழா 2013 மே மாதம் 5 ம் நாள் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது... அனைவரும் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்சிகளை கண்டு குழந்தைகளை வாழ்த்தி மகிழ்விக்கும்படி அன்புடன் அழைக்கிறோம்... என்றும் அன்புடன் தம்பி தங்கராஜ்